டொலர்களை அள்ளித்தரும் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள்!
ஒரு சராசரி இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி சுமார் 150 அமெரிக்க டொலர்களை இல்ஙகையில் செலவிடுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இது ஏனைய நாட்டு சுற்றுலாப் பயணர்களுடன் ஒப்பிடும்போது உயர்ந்த செலவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைமை பார்வைக் குழுவில் அமைச்சின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சபாத் இல்ல விவகாரம்
இதனை பொதுவாகக் கணக்கிட முடியும் என்றாலும் பயணிகளின் நாட்டினை அடிப்படையாகக் கொண்டு செலவீட்டு திறனைக் கணிக்கத் தகுந்த முறைமை இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இக்குழுவின் கூட்டத்தில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கான சபாத் இல்லங்கள் (Chabad Houses) குறித்து உருவாகி வரும் உள்நாட்டு பாதுகாப்பு கவலைகளுக்கு இடையில், இவை குறித்து அமைச்சின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
சட்டத்தின் கீழ் பதிவு
அதற்கு பதிலளித்த அமைச்சு அதிகாரிகள், இலங்கையில் உள்ள 5 சபாத் இல்லங்களில் 2 மட்டும் நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.
இந்த கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைப் பார்வைக் குழு கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

