தலைமைத்துவ வெற்றிடத்தில் தடுமாறும் தமிழர் அரசியல்
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக, கடந்த கால தலைமைத்துவத்தை அப்படியே தேடுவதற்குப் பதிலாக, அதன் சிந்தனைகள் மற்றும் வழிகாட்டல்களை பிரதிபலிக்கும் புதிய தலைமையை உருவாக்க வேண்டும் என்பது முக்கியத்துவமிக்க விடயமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து தமிழர்களின் அரசியல் நலன்சார் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டிய கட்டத்தில் தற்போது இருக்கின்றனர்.
நாளுக்கு நாள் பொதுநலன் மறந்து தனி அரசியல் நலனில் மாட்டிக்கொண்டு தவிக்கும் தமிழர்களின் அரசியல் இலக்குகளுக்கு விடிவுகாலத்தை உருவாக்க, புதிய தலைமைத்துவம் என்பதை உருவாக்க வேண்டியது தலையாய கடமையாக மாறியுள்ளது.
இந்நிலையில் தமிழ் மண்ணுக்காக தன்னுயிர் துறந்த தியாக மனிதர்களின் வரலாற்றை மறந்து திரியும் தற்போதைய அரசியலுக்கு, பாடம் கற்பிக்க வேண்டும் என மேற்கண்ட தனது நிலைப்பாடுகளை மையப்படுத்தி ஐ.பி.சி ஊடக நிறுவனத்தின் மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச அரசியல் ஆய்வாளருமான நிராஜ் டேவிட்டின் கருத்துக்கள் மேற்கண்ட விடயங்களின் தன்மையை தெளிவாக விளங்கப்படுத்துகின்றன.
கடந்த காலத்தில் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்துக்குப் பின்னர் தமிழ் சமூகம் பல்வேறு துறைகளில் பின்னடைவை எதிர்கொண்டுள்ளதாகவும், குறிப்பாக பொருளாதாரம், தொழில்துறை, தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் சுட்டிய அவர் ஐ.பி.சி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் முன்வைத்த கருத்துக்கள் தமிழர் அரசியலின் பல விடயங்களை மையப்படுத்துகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |