டுபாயிலிருந்து தங்கம் கடத்திய விமானப் பயணி: கட்டுநாயக்காவில் கைது
கட்டுநாயக்கவில் இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (03-10-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, பல்லேகலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபர் நேற்று டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
அங்கு தனது உடலில் 4 பொதிகளாக்கி 996 கிராம் எடையுள்ள இத்தங்க நகைகளை மறைத்துக்கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக இப்பயணியும் அவரால் கொண்டுவரப்பட்ட தங்க நகைகளும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (04) அதிகாலை வரை இது குறித்து முறைப்படியான சுங்க விசாரணை நடத்தப்பட்டதுடன், இத்தங்க நகைகளை அரசுடைமையாக்கவும், குறித்த பயணிக்கு 37 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |