நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு விபத்துகளில் நால்வர் பலி!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான வெவ்வேறு வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் ஹபரணையிலிருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த பெண் பயணியும் காயமடைந்து கந்தளாய் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியின் சாரதி
இவ்விபததில் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து கல்முனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் முச்சக்கரவண்டியின் சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி காயமடைந்து அம்பாறை மாவட்டப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதி
இந்தநிலையில் உடவலவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அத்தோடு ஹொரணையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றுடன் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும் பின்னால் அமர்ந்து பயணித்த பெண்ணும் கல்பாத்த பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கல்பாத்த பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய வாலிபரும் 16 வயதுடைய சிறுமியும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |