மகிந்தவின் இணைப்புச் செயலருக்கு விருது வழங்கி கௌரவிப்பு
Award
Tamil Nadu
Ambassador of Sri Lanka
Music education
By MKkamshan
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான எஸ்.சந்ருபெர்னாண்டோவிற்கு இலங்கைக்கான தூதுவருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை சுகஜீவ பேராலயத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச இசைக்கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைக்கான தூதுவருக்கான விருதே வழங்கப்பட்டது.
தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் வி.ஜி. பி. நிறுவனத்தின் உப தலைவரும், சுகஜீவிய பேராலயத்தின் தலைவருமான வி.ஜி.எஸ் . காடினல் செல்வராஜின் அழைப்பில் சென்ற இவருக்கு சிறப்பு விருதாக “சாதனை சர்க்கரவர்த்தி” விருதும் வழங்கப்பட்டது.












மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்