அயோத்தி ராமர் கோவிலை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி
பல்லாயிரக்கணக்கனக்கான மக்கள் மத்தியில் திறந்து வைக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயிலை நாளை முதல் பொதுமக்கள் தரசிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை ஜெய்ஸ்ரீ ராம் கோஷத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலானது பெரும் சர்ச்சைக்கு மத்தியில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த (16) முதல் தொடங்கியது.
கோலாகலமான அயோத்தி
இதனைத்தொடர்ந்து இன்று காலை அயோத்தி கோலாகலமாக காணப்பட்டது. பெரிய பெரிய தொழிலதிபர்கள் முதல் பிரபலங்கள் வரை அயோத்தியில் குவிந்தனர்.
இந்நிலையில், அயோத்திக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி சரியாக மதியம் 12.10 மணிக்கு அயோத்தி ஆலய கருவறையில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகளை தொடங்கினார்.
ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 84 வினாடி நேரம் ஆகும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.
நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்கு
ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வை பார்ப்பதற்கு சுமார் 8 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் ஏற்ப வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் கருவறை பூஜைகள் சுமார் 1 மணி வரை நடைபெற்றது.
இன்று மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் நாளை(23) முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |