சட்டவிரோத ஐரோப்பிய பயணம் - இலங்கையர் நால்வர் அஜர்பைஜானில் கைது
Sri Lankan Peoples
Iran
Europe
By Sumithiran
இலங்கையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள்
அஜர்பைஜானின் பெய்லாகன் மாவட்டத்தின் பிரிஞ்சி ஷாசெவன் கிராமத்திற்கு அருகில் ஈரானுடனான எல்லையை கடக்க முயன்றவேளை இலங்கையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் அஜர்பைஜான் எல்லை காப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கைப் பிரஜைகள் தோஹா மற்றும் டுபாயில் இருந்து அஸர்பைஜானின் பாகு நகருக்கு வந்திருந்ததாக அந்தச் சேவை தெரிவித்துள்ளது.
ஈரான் எல்லை வழியாக,செல்ல முயற்சி
ஈரானின் எல்லை வழியாக, எல்லை மீறுபவர்கள் துர்கியேவுக்குச் செல்ல விரும்பினர், அங்கிருந்து - ஐரோப்பிய நாடுகளில் ஒன்றிற்கு, செல்ல இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத இடம்பெயர்வின் வழியை கண்டறிய விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி