அதி வீரியம் கொண்ட புதிய கொவிட் திரிபு கண்டறிவு
corona virus
south africa
variant
b.1.1.529
By Vanan
தென்னாபிரிக்காவில் அதி வீரியமிக்க புதிய கொவிட் வைரஸ் திரிபு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
பீ.1.1.529 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது டெல்டா திரிபை விடவும் ஐந்து மடங்கு வீரியமிக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கண்டறியப்பட்ட இந்தத் திரிபானது, இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள திரிபுகளில், அதிக வீரியம் கொண்டது என விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.
இதேவேளை மற்றுமொரு விஞ்ஞானி இது மிகவும் வேகமாக பரவக்கூடியது எனக் கூறியுள்ளார்.
தென்னாபிரிக்கா, ஹொங்கொங் மற்றும் பொத்ஸ்வானா முதலான நாடுகளில் இந்தப் புதிய திரிபுடன், 59 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி