2023 இல் நடக்கப்போகும் பேரழிவு -அச்சம் தரும் பாபா வாங்காவின் கணிப்புகள்
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா எனும் தீர்க்கதரிசி எதிர்காலம் குறித்து கணித்துள்ள கணிப்புகள் பெரும்பாலும் நடந்தேறியுள்ளன.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டும் என்ன நடக்கும் என்பதை அவர் முன்கூட்டியே கணித்து தெரிவித்துள்ளார்.
அப்படி அவர் கணித்த கணிப்புகளில் மூன்றாம் உலக யுத்தம், காலநிலை மாற்றம், விசித்திரமான கண்டுபிடிப்புகள் என பலவற்றை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறிய விடயங்களில் பெருமளவானவை அழிவு சார்ந்ததாகவே உள்ளன. இதனால் உலகில் வாழும் மக்கள் அவரின் கணிப்பால் அச்சத்துடனேயே உள்ளனர்.
அவர் 2023 ஆம் ஆண்டு கணித்து கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு,
அணுமின் நிலையத்தில் வெடிப்பு
2023 ஆம் ஆண்டில், ஒரு பெரிய அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்படலாம். இதன் காரணமாக, ஆசியா கண்டத்தின் வானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார். பாபா வாங்காவின் இந்த கணிப்பு ஆசியா கண்டத்தில் வாழும் மக்களை தூங்க விடாமல் செய்துள்ளது.
மூன்றாம் உலகப் போர்
மூன்றாம் உலகப் போர் 2023இல் தொடங்கலாம். இந்த நேரத்தில் உலகின் எந்த நாடும் அணுகுண்டு மூலம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாக, உலகின் பெரும்பகுதியில் அழிவுகரமான காட்சியைக் காணலாம் என கூறியுள்ளார். தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், இந்த கணிப்பு உண்மையாகி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு சில பெரிய வானியல் நிகழ்வுகள் நடக்கலாம். இது மட்டுமன்றி இதன் காரணமாக பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்படலாம். இது நமது சுற்றுச்சூழலில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். பூமியிலுள்ளவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே காலநிலை மாற்றத்தினால், மக்கள் கடும் வெப்பம் அனுபவித்து வரும் நிலையில், இந்த கணிப்பு குறித்தும் மக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது
மற்றொரு கணிப்பில், 2023 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் பல விசித்திரமான கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இவற்றில் ஒன்று ஆபத்தான உயிரியல் ஆயுதமாகவும் இருக்கலாம். அதை பயன்படுத்தினால் பெரிய அளவில் உலகம் பேரழிவை காணலாம் என கூறப்படுகிறது.
இயற்கை பேரழிவு
2023 ஆம் ஆண்டு சோகம் மற்றும் இருள் நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டு பருவமழை பெய்யும். இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். பல பகுதிகளில் கடுமையான புயல்களும் ஏற்படலாம். வேற்று கிரக வாசிகள் இந்தியா வருவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
பாபா வாங்காவின் இந்த கணிப்புகள் எந்த அளவிற்கு உண்மை என்பது எதிர்காலத்தில் தெரியும். ஆனால், அவரது பழைய கணிப்புகள் பல உண்மையானதை நினைத்து பலரும் அச்சத்தில் உள்ளனர்.