பிரித்தானிய மன்னர் சார்லஸின் ஆட்சிக்கு முடிவே இல்லை..! சர்ச்சையை கிளப்பியுள்ள பாபா வங்காவின் கணிப்பு
பிரித்தானிய மன்னர் சார்லஸ் 97 வயது வரையில் உயிருடன் இருந்தால், அவரது ஆட்சிக்கு முடிவே இல்லை என பாபா வங்கா கணித்துள்ளதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சார்லஸ் மன்னர் 97 வயது வரையில் உயிருடன் இருந்தால் மட்டுமே, பாபா வங்கா கணித்துள்ளபடி அவரது ஆட்சிக்கு முடிவே இருக்காது என கூறப்படுகிறது.
பல்கேரியரான பாபா வங்கா இதுவரை கணித்துள்ளவற்றில் தோராயமாக 85% நிறைவேறியுள்ளதாகவே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அவரது கணிப்புகளில் ஒன்று, உலகம் பூராகவும் கொரோனா நோய்த்தொற்று நோய் என குறிப்பிட்டுள்ளார்.
மன்னர் சார்லசின் வயது
அதேவேளை, 2046க்கு பின்னர் மனித குலம் 100 வயதைக் கடந்து வாழும் என பாபா வங்க கணித்து கூறியதாக அவரது சீடர்கள் கூறுகின்றனர்.
இந்த கணிப்பானது அறிவியலின் வளர்ச்சி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளால் இது சாத்தியமாகும் எனவும் பாபா வாங்கா தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், தற்போது மன்னர் சார்லசின் வயது 73, இன்னும் 24 ஆண்டுகள் அவர் உயிருடன் இருந்தால், அதாவது 97 வயது வரையில் அவர் ஆட்சியில் இருந்தால் பாபா வாங்கா குறிப்பிட்டுள்ளபடி கணிப்பு நிஜமாகும் என்கிறார்கள்.
