அடுத்தடுத்து நடக்கப்போகும் பேராபத்துகள் இதுதான் : பாபா வங்கா கணிப்பு!
உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.
உலகம் அழியும்
எனவே, ஒவ்வொரு வருடமும் பிறப்பதற்கு முன்பு அந்த ஆண்டில் என்ன மாதிரியான நல்லது, கெட்டது நடக்கும் என்பது பற்றி பாபா வங்காவின் கணிப்புகளை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர்.
2025ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகள் சற்று அச்சுறுத்தலாகவே உள்ளன. ஏனென்றால், 2025ஆம் ஆண்டு உலக அழிவு தொடங்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
5079ஆம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அப்போது பூமியில் மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்றும் அவர் கணித்துள்ளார்.
மனிதகுலத்தின் வீழ்ச்சி
2025ஆம் ஆண்டில் பெரிய மோதல்கள், சோகமான சம்பவங்கள் நடைபெறும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். அது மனிதகுலத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும், ஐரோப்பாவில் ஒரு பேரழிவுக்கான மோதல் ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.
இந்த மோதல் ஐரோப்பிய கண்டத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில், மோதல் காரணமாக மக்கள் தொகை கணிசமாகக் குறையும். அதன் பிறகு, 2028ல் புதிய வளங்களைத் தேடி மனிதர்கள் வீனஸை (Venus) அடைவார்கள் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
பின்னர் 2033-ல் மிகப்பெரிய பனிக்கட்டிகள் உருகும் என்றும், இதனால் கடல் மட்டம் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளார். இதனால் பெரிய அலைகள் தாக்கி பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 3797ல் பூமியிலிருந்து உயிர்கள் பிரியும் என்றும், இறுதியாக 5079ல் உலகம் அழிந்து மனித இனம் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)