பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ளப்போவது யார்.! பதிலை வழங்கியது இஸ்ரேல்
காசாவில் (Gaza) இருந்து வெளியேற்றப்படும் பாலஸ்தீனியர்களை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்விக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz) பதிலளித்துள்ளார்.
காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்த நாடுகள் அவர்களை பொறுப்பேற்க வேண்டும் என்று அதன்போது கட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான நாடுகள்
அதன்படி, இஸ்ரேலுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான கூற்றுக்களை சுமத்திய ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே மற்றும் பிற நாடுகள், எந்தவொரு காசா குடியிருப்பாளரையும் தங்கள் பிரதேசங்களுக்குள் நுழைய அனுமதிக்க சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ், கட்ஸின் குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரித்துள்ளதுடன், காசா மக்களின் நிலம் காசா, காசா எதிர்கால பாலஸ்தீன அரசின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கட்ஸின் உத்தரவு
இந்த நிலையில், இராணுவத்திற்கு காசா பகுதியில் இருந்து குடியிருப்பாளர்கள் தாமாக முன்வந்து வெளியேற அனுமதிக்கும் திட்டத்தை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உத்தரவிட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா காசாவை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிர்ச்சி அறிவிப்பைத் தொடர்ந்து கட்ஸின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |