இந்தியா - பாகிஸ்தான் போர் : பாபா வாங்காவின் பயங்கர கணிப்பு
பஹல்காம் (Pahalagam) பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் (India) நடவடிக்கை மற்றும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் என்பன தற்போது தீவிரமாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்குமா என்ற பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் வைரலாலகி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
இந்த தாக்குதல் தீவிரவாதத்துக்கான எதிரான நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதத்தை எதிர்க்கும் இந்தியாவுக்கு எப்போதும் துணை நிற்போம் என அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் உறுதி அளித்துள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தானை இந்தியா துடைத்துவிடுமா? இந்தியா பாகிஸ்தானை முற்றிலுமாக அழித்துவிடுமா? என்பது குறித்த பாபா வங்காவின் கணிப்பு வைரலாகி வருகிறது.
அதாவது பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானைப் பற்றி ஒரு கணிப்பை குறிப்பிட்டுள்ளார்.
பாபா வங்காவின் கணிப்பு
தற்போது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாபா வங்காவின் அந்த கணிப்பு நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது இந்தியா -பாகிஸ்தான் போர் அல்லது குறிப்பாக பாகிஸ்தானின் அழிவு குறித்து அவர் தெளிவான அல்லது நேரடியான கணிப்புகளை கூறவில்லை.
இருப்பினும், அவரது சில அறிக்கைகள் பாகிஸ்தானில் அழிவு மற்றும் பேரழிவுக்கான சாத்தியத்தை கூறும் வகையில் உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் என்று பாபா வங்காவின் கணிப்புகள் கூறாத நிலையில் பாகிஸ்தானில் பேரழிவு ஏற்படும் என பாபா வங்கா கணித்திருப்பதால், மக்கள் போர் பதற்றத்துடன் தொடர்புப்படுத்தி வருகின்றனர்.
பாபா வங்கா 2025 ஆம் ஆண்டிற்கான சில பொதுவான கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி ஐரோப்பாவில் ஒரு பெரிய மோதல் வெடிக்கும் என கணித்துள்ளார்.
மேலும் சில நாடுகள் பேரழிவை சந்தித்து நாகரீகம் அழிக்கப்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
