திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஐந்து பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கு இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெளத்த மத குருக்கள் நால்வரும் ஏனைய பொதுமக்களும் இன்றைய வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, பெளத்த மதச்சங்களது பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் என பலர் இன்றையதினம் குறித்த வழக்கிற்கு வருகை தந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

மேலும் திருகோணமலை நகர் பூராகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருபதனையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |