ஒன்பது மாத குழந்தையை காவு வாங்கிய விபத்து!
Sri Lanka Police
Accident
By pavan
குருநாகல் காவல்துறை பிரிவுக்குட்பட்ட குருநாகல் வெவரவும வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பன்தம்பலாவ பகுதியில் இருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் நான்கு பயணிகளும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் குறித்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குருநாகல், பமுனுகெதர பிரதேசத்தை சேர்ந்த சிலரே இந்த விபத்தில் சிக்கியதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்