யாழில் துயர சம்பவம் : எறும்பு கடித்ததில் 21 நாளேயான சிசு உயிரிழப்பு
Jaffna
Sri Lanka
Jaffna Teaching Hospital
By Raghav
யாழ்ப்பாணம் (Jaffna) - மானிப்பாய் (Manipay) பகுதியில் பிறந்து 21 நாளான பெண் சிசு ஒன்று எறும்பு கடித்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆலடி உடுவில் - மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22ஆம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை
இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் சிசுவுக்கு எறும்பு கடித்த நிலையில் அதனை அவர்கள் கவனிக்காமல் விட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், எறும்பு கடித்த இடத்தில் கிருமி தொற்று ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி