குழந்தைகளுக்கான சவர்க்காரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் சில நிறுவனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரிப்பதாக தெரியவந்துள்ளது.
இதனை நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) தெரிவித்துள்ளது.
இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி, இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சோப்புகளின் TFM பெறுமதி 78 ஆக இருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், நாட்டில் உள்ள பிரதான சவர்க்கார உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட குழந்தை சவர்க்காரங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை பரிசோதித்த போது அதன் TFM பெறுமதி 63 என கண்டறியப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு எச்சரிக்கை
நிறுவனம் தயாரித்த குழந்தைகளுக்கான சவர்க்காரப் பொதியில் இலங்கை தரநிலைப் பணியகம் SLS சான்றிதழ் அச்சிடப்பட்டதாகவும், 78 எனப் பொதியில் TFM மதிப்பாக மோசடியான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை ஜூலை 6ஆம் திகதி மாளிகாகந்த (Malikakantha) நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.நிறுவனமே தவறை ஒப்புக்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை கொள்வனவு செய்து பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு அதிகார சபை அண்மையில் ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்திருந்தது.
இதற்கிடையில், இலங்கை தர நிர்ணய பணியகத்திடம் இருந்து SLS சான்றிதழ் பெற்ற சவர்க்காரங்களின் பட்டியலைப் பெற்று, அந்த சவர்க்காரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் TFM மதிப்பு உள்ளதா என்பதை சரிபார்க்க நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |