மீண்டும் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்!
market
sugar
sri Lanka
By Kalaimathy
சந்தைகளில் தற்போது விற்பனைக்காக சிவப்பு சீனி மாத்திரமே காணப்படுவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தற்போது சந்தையில் வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தினால் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலவுவதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் சீனி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 170 ரூபா வரை அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.