இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள் : பீதியில் மக்கள்
இந்தியாவின் (India) - வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மணிப்பூரில் இன்று (05) காலை 11.06 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் முதலாவது நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் மையப்பகுதி இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள யெய்ரிபோக்கிலிருந்து கிழக்கே 44 கி.மீ தொலைவிலும், 110 கி.மீ ஆழத்திலும் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்
மேலும் மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் பக்கத்திலுள்ள மாநிலங்களான அசாம், மேகலாயாவிலும் உணரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
EQ of M: 4.1, On: 05/03/2025 12:20:43 IST, Lat: 24.70 N, Long: 94.34 E, Depth: 66 Km, Location: Kamjong, Manipur.
— National Center for Seismology (@NCS_Earthquake) March 5, 2025
Our Website and App are down due to maintenance. We will be back soon, please bear with us. @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/4ON6OrTmk7
அதனையடுத்து மதியம் 12.20 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் பதிவான 2 ஆவது நிலநடுக்கம் கம்ஜோங் மாவட்டத்தில் 66 கி.மீ ஆழத்தில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
