நாட்டை உலுக்கிய துப்பாக்கி சூட்டின் திடுக்கிடும் பின்னணி
நாடளாவிய ரீதியில் தற்போது பேசுபொருளாக கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவமே காணப்படுகின்றது.
பாதாள உலக கும்பலின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ நேற்று (19) கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவ, பூசா சிறைச்சாலையிலிருந்து நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றது.
வழக்கறிஞர் வேடமணிந்து வந்த நபரொருவரும் மற்றும் அவருக்கு உதவியாக பெண்ணொருவரும் திட்டமிட்டு குறித்த சம்பவத்தை நிகழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதுடைய சந்தேகநபரை புத்தளம் பாலவி பகுதியில் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில், குறித்த நபர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் லெப்டினன்ட் தர அதிகாரி என தெரியவந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக சீதுவ மற்றும் கல்கிஸை காவல் பிரிவுகளில் குறித்த நபர் ஏழு கொலைகள் செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்தநிலையில், ஒரு நீதிமன்றத்திற்குள் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது நாடளாவிய ரீதியில் பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளதுடன் இது குறித்து பலதரப்பட்ட வகையில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதனடிப்படையில், குறித்த கொலைக்கான காரணம் மற்றும் பின்னணிதொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய சமகாலம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
