றோ - பசில் சந்திப்பின் பின்னணி..! வெளியான தகவல்
Basil Rajapaksa
By Kiruththikan
இலங்கைக்கு அண்மையில் இரகசிய பயணமொன்றை மேற்கொண்டார் எனக் கூறப்படும் இந்தியாவின் உளவுப் பிரிவான ‘றோ’ அமைப்பின் தலைமை நிர்வாகி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பஸில் ராஜபக்சவை சந்திப்பதற்கு எவருக்கும் தடை இல்லை. அவருடன் எவரும் பேச்சு நடத்தலாம் என கட்சி செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் பின்னர் அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச, கடந்த 20 ஆம் திகதி நாடு திரும்பினார்.
அந்த காலப்பகுதியிலேயே றோ பிரதானியும் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டார் எனக் கூறப்படுகின்றது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
3ம் ஆண்டு நினைவஞ்சலி