ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை : வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
சீரற்ற வானிலை காரணமாக ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து (892) பாடசாலைகளும் இன்று (9) முற்பகல் 11.45 அளவில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண தலைமைச் செயலாளர் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (09) முற்பகல் 11 மணிக்கு முன்னதாகவே விடுமுறை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய எதிர்வுகூறல்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்படவுள்ளதாக ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய, பசறை, பதுளை, லுணுகலை, ஹப்புத்தளை, எல்ல, பண்டாரவளை, ஹாலி - எல, வெளிமடை, மிகஹகிவுல மற்றும் ஊவா பரணகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையிலேயே, குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 14 மணி நேரம் முன்