இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட சீனப் பிரஜைகளின் பிணை நிராகரிப்பு
இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சீனப் (China) பிரஜைகளின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் கண்டி (Kandy) - குண்டசாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட130 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த வழக்கு தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
சந்தேக நபர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான 3 சட்டத்தரணிகள் பிணை கோரிக்கையை முன்வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த 130 சீன பிரஜைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட அனைவரும் பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இதற்கு முன்னரும் அவர்கள் முன்வைத்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 22 மணி நேரம் முன்