இலங்கைக்கு வந்து குவியும் இந்திய சுற்றுலாப் பயணிகள்
இந்தியாவிலிருந்து (India) இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த மாதத்தின் 27ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 117,141 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள்
அவர்களில் 32,097சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரித்தானியாவில் (UK) இருந்து 9,113 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
மூன்றாவதாக ஜேர்மனியிலிருந்து (Germany) 7,609 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வந்துள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது.
பயண ஆலோசனைகளை
இதேவேளை இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை என பயண முகவர் சங்கத்தின் தலைவர் நளின் ஜயசுந்தர (Nalin Jayasundara) அண்மையில் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா (US) மற்றும் பிரித்தானியா (UK) உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கான தங்களது பயண ஆலோசனைகளைப் புதுப்பித்திருந்த போதிலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |