மட்டக்களப்பை உலுக்கும் காட்டுயானைகள்! அதிகரிக்கும் உயிர் பலிகள்

Batticaloa Sri Lankan Peoples Elephant
By Bavan Feb 27, 2026 07:58 AM GMT
Report

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை முனைக்காடு குடியிருப்பு பிரதேசத்திற்குள் காட்டு யானை ஒன்று ஊடுருவி தாக்கியதில் 74 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய கதிர்காமத்தம்பி சிவபாக்கியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, 44 வயதுடைய அருள்சிவம் கோமதி, மற்றும் 62 வயதுடைய ஞானசீலன் அருளம்மா ஆகிய இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான வழக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான வழக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


பெரும் பீதியில் மக்கள்

இந்த நிலையில், காட்டு யானை வீடு ஒன்றை உடைத்து சேதமாக்கிய அட்டகாசம் புரிந்து வருவதையடுத்து அப்பகுதியில இருந்து யானையை வெளியேற்றும் நடவடிக்கையை வனவிலங்கு அதிகாரிகள் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பை உலுக்கும் காட்டுயானைகள்! அதிகரிக்கும் உயிர் பலிகள் | Elephant Attacks On The Rise In Batticaloa

கடந்த சில நாட்களாகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் மாவட்ட மக்கள் பெரும் பய பீதியடைந்துள்ளதுடன் கடந்த 13 ம் திகதி வாழைச்சேனை நகருக்குள் யானைகள் ஊடுருவி தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், மட்டக்களப்பில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை யானை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரித் திருத்தம் : அநுர வெளியிட்ட வர்த்தமானி

நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரித் திருத்தம் : அநுர வெளியிட்ட வர்த்தமானி

ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016