பெக்கோ சமனின் மனைவிக்கு பிணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி சாதிகா லக்ஷானியை பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று (31) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விஷ போதைப் பொருள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, சந்தேகநபரை விளக்கமறியலில் வைப்பதற்கான போதுமான ஆதாரங்களை முறைப்பாட்டாளர் சமர்ப்பிக்க தவறியுள்ளார்.
இந்த நிலையில் பெக்கோ சமனின் மனைவிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமான நிலையத்தில் வைத்து கைது
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா காவல்துறையினரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த , பாணந்துறை நிலங்க மற்றும் பெக்கோ சமன் மற்றும் அவரைது மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஓகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு காவல்துறை தடுப்பு காவலில் வைக்கப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |