வாக்குப்பெட்டிகளை தயார் செய்யும் பணிகள் ஆரம்பம்! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
இலங்கையில் (Sri Lanka) நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு தேவையான வாக்குப்பெட்டிகளை தயார் செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, உடைந்த வாக்குப்பெட்டிகளை சரிசெய்யுமாறும் பொறுப்பதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் நிச்சயமாக அதிபர் தேர்தல் நடைபெறும். இதனை முன்னிட்டு வாக்குப்பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி விபரங்கள்
வாக்குச்சாவடி விபரங்கள் கிடைத்தவுடன், வாக்குப்பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை உடனடியாக சரி செய்ய ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

மேலும், வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட சேதமான வாக்குப்பெட்டிகள் ஏராளமாக உள்ளது. தற்போது அவை பழுதுபார்ப்பதற்காக அரசு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்
இதேவேளை, தேர்தலை இலக்காகக் கொண்டு அதிகாரிகள் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும்.
இது தொடர்பில் உள்ளுராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளோம்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் குறித்தும் இதன் போது விவாதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்