பாகிஸ்தானை பிரித்து கேட்கும் யார் இந்த பலுசிஸ்தானியர்கள்
உலகில் விடுதலை வேண்டி போராடும் இனங்கள் யாவற்றையும் இந்த உலக ஒழுங்கின் பெயரில் ஒடுக்கிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் தனது இருப்புக்காக தமதுமக்களின் சுயாட்சி உரிமைக்காக போராட எத்தனிக்கப்படுகின்ற போராட்ட அமைப்புகளை பயங்கரவாதிகள் என்று பார்ப்பது இப்போதைய உலகின் எழுதப்படாத சட்டம்.
ஆனால் விடுதலை வேண்டி போராடி ஒரு மிகப்பெரும் இன அழிப்பின் சுவடுகளை சுமந்து நிற்கின்ற ஒரு இனமாக நாம் அவ்வாறு அடையாளப்படுத்தி விட முடியாது விடுதலை வேட்களையும் சுய ஆட்சி உரிமையினையும் தங்களுக்கான தனிநாட்டையும் கோரி போராடுகின்ற இனங்களின் வலிகள் ஈழத்தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஏன் என்றால் இந்த உலகின் போராட்ட இனங்களுள் அதியுச்சதியாகங்களையும் இழப்புகளையும் சாதனையும் தன் கடந்த கால வரலாற்று.

பலுசிஸ்தான் சுதந்திர நாடு...! பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம் - அதிரடி அறிவிப்பால் அதிரும் உலகம்
தேசிய விடுதலை போராளிகள்
குறிப்புகளாக கொண்டவர்கள் நாம் இந்திய பாகிஸ்தான் யுத்த அதிர்வலைகள். நம்மை உலுக்கிக் கொண்டிருந்த போது இன்னுமொரு புறமாக பாகிஸ்தானின் சுமார் 40 அதிகமான இராணுவ படைய உறுப்பினர்களை கொன்று உரிமை கோரிய ஒரு கூட்டத்தின் மீது நமது பார்வைகள் திருப்பத்தொடங்கியது.
அது பலூசிய இன மக்களின் விடுதலையை கோரிய BLA பலூசிய தேசிய விடுதலை போராளிகள் என்ற பாகிஸ்தானின் உள்நாட்டு போராட்ட அமைப்பு இவர்கள் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது தாங்கள் விருப்பின்றிய முறையில் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானோடு சேர்க்கப்பட்டதாக கூறுகின்றார்கள்.
சுதந்திரநாடாக வேண்டும் என்பது கனவு
தங்களை ஒரு சுதந்திரநாடாக காண வேண்டும் என்பதே இவர்களின் கனவு, அது நடைபெறவில்லை என்பதற்காக இன்றுவரை பாகிஸ்தானின் அரச ராணுவத்துடன் போராடி வருகிறார்கள்.
இந்த கோட்பாட்டோடு பல அமைப்புகள் செயற்பட்டுவந்தாலும் bla என்ற பலுசிஸ்தானிய விடுதலை அமைப்பே முதன்மையானதும் பழமையானதுமாகும் இந்த அமைப்பு கடந்த 1970 களில் தமது கோரிக்கையை முன்வைத்து போராட ஆரம்பித்தவர்களில் பாகிஸ்தானில் ஒரு மிகப்பெரிய மாநிலமாக காணப்படும் பலுசிஸ்தான் பாகிஸ்தானின் 44 % வீதமான நிலப்பரப்பை கொண்டது.
இந்த நிலப்பரப்பையே தனிநாடாக கோரி இவர்கள் போராடி வருகிறார்கள் குறிப்பாக அப்போதைய பாகிஸ்தானின் சுல்பிகர் அலி பூட்டோவின் அரசுக்கு எதிராக பலூச் போராளிகள் ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தொடங்கினார்கள் .
ஆனால் அதன் பின் ஆட்சிக்கு வந்த ராணுவ சர்வாதிகாரியான ஜியாவுல் ஹக் ஆட்சிக்கு வந்த பிறகு பலூச் சமூக தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
படையினரின் நிலைகள் மீது தொடர் தாக்குதல்
பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஆயுத போராட்டம் ஒரு முடிவை எட்டியது ஒப்பந்த முறிவுகள் தொடர் அடக்குமுறைகளின் விளைவாக 2000 ஆம் ஆண்டளவில் மீண்டும் போராட ஆரம்பித்தார்கள். இந்த அமைப்பு 2000-ஆம் ஆண்டு முதல், பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாகிஸ்தானிய அரசு அலுவலகங்கள் பாதுகாப்புப் படையினரின் நிலைகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியினர்.
பெரும்பாலும் மாரி மற்றும் புக்டி பழங்குடியினரை சேர்ந்தவர்களே இந்த அமைப்புகளின் போராளிகளாக தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர்.
பலுசிஸ்தானியர்கள் விடுதலை கோரி போராடும் தங்களது சுதந்திரநிலப்பகுதியான பலுசிஸ்தான் என்பது இரானின் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ் மற்றும் ஹெல்மண்ட் ஆகிய நிலப்பரப்புகளை கொண்டதே பலுசிஸ்தானின் என அவர்கள் அடையாளப்படுத்தும் நிலப்பகுதியாகும் குறிப்பாக இங்கு அதிகளவில் எரிவாயு, நிலக்கரி மற்றும் தாமிரம் இரும்புகள் போன்ற இயற்கையாகவே காணப்படுகிறது இத்தகு மூல வளங்கள்.
நிறைந்து காணப்பட்டாலும் பாகிஸ்தானின் மிக வறிய மாநிலமாகவே இது காணப்படுகிறது ஏன் என்றால். அரசு அந்தமக்களுக்கான வளங்களை சுரண்டி லாபமீட்டினாலும் குறித்த. இனக்கூட்டத்தை ஏதோ மாற்றான் தாய் பிள்ளைகளைப் போலவே வளக்கிறது.
இந்த நிலையின் தான் அவர் தங்களுக்கான சுதந்திரத்தை வேண்டிப்போராடுகிறார்கள் ஒவ்வொரு நாட்டின் உள் விவகாரங்களிலும் பிரச்சனைகளை ஊதி ஊதி பெருப்பித்து அதன் மூலம் குளிர்காய்கின்ற இந்திய ஆதரவு இந்த விடுதலைப் போராளிகளிடம் அதிகம் காணப்படும் இவர்களை அமைப்பியல் ரீதியாக தமது நோக்கங்களை நிறைவேற்றிக கொள்ள முனையும் இந்தியா எப்படி ஈழத்தமிழர்களைநம்ப வைத்து கழுத்து அறுத்த்தோ அதுபோலவே இந்த விடுதலையும் போராளிகளையும் சுதந்திர தாகம் கொண்ட தக்கள் கூட்டத்தையும் ஏமாற்றிவிடுமோ என்ற அச்சமே தோன்றுகிறது.
நீங்கள் யாராவது இந்த விடுதப்போராளிகளை சந்திக்க நேர்ந்தால் நிட்சயமாக ஒரு விடயத்தை மட்டும் கூறுங்கள் நீங்கள் போராடுங்கள் உங்கள் கனவானதேசத்தை அடைந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள்.
யூதர்கள் எப்படி அமெரிக்காவை வைத்திருக்கிறார்களோ
ஆனால் இந்தியா என்ற ஒரு நாட்டைமட்டும் நம்பி களமிறங்கி விடாதீர்கள் ஆனால் உங்களுக்கென்று ஒரு ஆதரவு சக்தியை சர்வதேச தளங்களில் வளர்த்துக் கொள்ளுங்கள் யூதர்கள் எப்படி அமெரிக்காவை வைத்திருக்கிறார்களோ, அதுபோல நீங்களும் ஒரு பலமான சர்வதேச சக்தியை நம்பிக்கைக்குரியதாக்கி கொள்ளுங்கள்.
எங்களுக்கு இன்னுமொரு விடுதலை இயக்கம் வீழ்ச்சியுறுவதில் உடன்பாடில்லை நாங்கள் அனுபவித்த வலிகளை நீங்கள் அனுபவிக்கூடாது , எங்களைப்போல நீங்கள் யாரையும் நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்பதே எங்களது பிராத்தனை உலகில் விடுதலை வேண்டிப் போராடும் ஒவ்வொரு இனங்களின் பின்னாலும் நாங்கள் உடனிருப்போம்.
உங்கள் போராட்டம் நியாயமானது ஒரு சுதந்திர தேசத்தை கோரியது என்றால் எனவே அன்பான சகோதர்ர்ரகளே உங்கள் தேசத்திற்காக உறுதியோடு போராடுங்கள் காலம் வழிசமைத்து தரும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் அப்படி நாடு அடைந்தால் இன்னுமொரு விடுதலை வேண்டும் கூட்டத்தின் விடுதலைகளுக்காக பேசுங்கள் வரலாற்றின் கியூபாவைப் போலவோ அதன் விடுதலையாளன் பிடல் ஹஸ்ரோ போலவோ மாறிவிடாதீர்கள்.
உலகில் போராடும் இனங்களை அவர்களின் வலிகளை நாங்கள் நன்கறிவோம் எனவேதான் விடுதலை என்ற சொல்லும் சுதந்திரதாகம் கொண்டலையும் ஒவ்வொருவருக்காகவும் பேச எங்கள் நா எழுகிறது பலுசிஸ்தானியர்களின் கனவென்றாலும் நனவாகட்டும் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான அவர்களின் சுதந்திர தாகம் தீரட்டும் ஈழத்தமிழரின் வலிகளை இந்த வலிசுமந்த நாட்களில் நினைவேந்தும் நாட்களில் இன்னுமொரு விடுதலையாடிகளின் கூட்டத்தை பேசி அவர்களின் கனவுகளையும் மதிப்பளித்து உலகத்தமிழ் உறவுகளிடையே கொண்டு சேர்க்கிறது ஐபிசி தமிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 16 May, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
