இந்தியாவில் 156 மருந்துகளுக்கு தடை: மத்திய அரசின் அதிரடி தீர்மானம்
Sri Lankan Peoples
India
World
By Dilakshan
இந்தியாவில் (India) பயன்படுத்தப்படும் 156 மருந்துகளுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, காய்ச்சல், சளி மற்றும் ஆன்டிபயாட்டிக்குகளுக்கு பயன்படுத்தப்படும் பல வகையான மருந்துகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மருந்துகளின் பயன்பாடு மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது கண்டயறிப்பட்டதை தொடர்ந்து, அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தடை
இதேவேளை, அந்த மருந்துகளுக்குப் பதிலாக மாற்று மருந்துகள் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி