ஒமைக்ரோனால் சென்னை கடற்கரையில் நுழைவதற்கு தடை
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கடற்கரைகளில் நாளை முதல் மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதாக தமிழ்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கொரோனா ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை முதல் சென்னை கடற்கரையில் மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒமைக்ரோன் கொரோனா பரவல் காரணமாக மறுஉத்தரவு வரும் வரை கடற்கரையின் மணற்பரப்பில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட உள்ளதாகவும்,பிரத்தியேக நடைபாதையில் மட்டும் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.