100 டொலருக்குக் கீழ் குறைந்த கச்சா எண்ணெய் விலை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக இந்த வாரத் தொடக்கத்தில் பேரல் ஒன்றுக்கு 100 டொலர் என்ற மைல்கல்லை சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை எட்டியிருந்தது.
இந்தநிலையில் தற்போது மீண்டும் 100 டொலருக்குக் கீழ் சிறிதளவு சரிவைச் சந்தித்துள்ளது.
எண்ணெய் விநியோகம்
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதால் ஏற்கனவே முடங்கியுள்ள சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு மத்தியிலும், செங்கடலில் பயணித்த சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது ஏமனின் ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இது உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியில் மேலதிக நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

இந்தநிலையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் ஏற்ற இறக்கங்கள் காரணமாக அமெரிக்காவில் சராசரி எரிபொருள் (Gas) விலை தொடர்ந்து ஒரு கேலனுக்கு நான்கு டொலரை விட அதிகமாக நீடித்து வருகின்றது.
மத்திய கிழக்கில் பரவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தை தொடர்ந்து நிலையற்ற தன்மையுடன் காணப்படுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |