விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குங்கள்: சபையில் பொங்கி எழுந்த தமிழ் எம்பி
ஜேவிபி மீதான தடை எவ்வாறு நீக்கப்பட்டதோ அதேபோல் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையும் நீக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஒற்றை ஆட்சியை ஒழித்து தமிழ்த் தேசியம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஷ்டி தீர்வை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
அதேவேளை, தமிழீழ விடுதலை புலிகள் என்ற பூச்சாண்டியை காட்டிக்கொண்டு ஒரு போதும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலமாகவோ வரி திருத்தங்களினூடாகவோ இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த பயங்கரவாத எதிர்பபுச் சட்டத்தை அவர் முற்றாக நிராகரிப்பதாகவும் இது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஒடுக்கி இந்த நாட்டை ஒரு சிங்கள பௌத்த நிரலுக்குள் கொண்டு செல்வதற்கு மாத்திரமே அது உதவுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |