ருவன்வெலிசாய சத்தியாக்கிரகப் பகுதி வர்த்தகர்களுக்கு தடை: தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை
அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் சத்தியாக்கிரகம் இடம்பெற்ற பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதித்து தொல்பொருள் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பல பிக்குகள் குறித்த பகுதியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தொல்பொருள் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தற்போது குறித்த பகுதியின் எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதுடன், அப்பகுதியைச் சுற்றி அறிவிப்புப் பலகைகளும் பொருத்தப்பட்டு, உட்பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
வர்த்தக சமூகத்தினர் எதிர்ப்பு
எனினும், தொல்பொருள் திணைக்களத்தின் இந்தத் தீர்மானத்திற்கு வர்த்தக சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, குறித்த பகுதியில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கும், பௌத்த சாசனத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் இடையில் நேற்று (12) மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலைத் தொடர்ந்து பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |