கரைவலைத் தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு...!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதால் சிறு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
அனுமதி ரத்து
இந்நிலையில், உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி கரைவலைத் தொழிலில் ஈடுபடுவது தடை செய்யப்படுவதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தோடு, கடந்த காலத்தில் இதற்காக வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறித்த தடையானது நாடு முழுவதுக்கும் பொருந்தும் எனவும் திணைக்களம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இருந்தபோதிலும், வடமராட்சி கிழக்கின் ஒரு சில பகுதிகளில் தற்போதும் உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி கரைவலைத் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
