சமாளிக்கவே விலைகளைக் குறைத்தோம்! நாடாளுமன்றில் வர்த்தக அமைச்சர் வெளியிட்ட புள்ளிவிபரம்
உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளையும் மக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்கப்பட்டுள்ளமையையும் கருத்தில் கொண்டே சம்பிரதாய முறைமைகளுக்கு பதிலாக மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா நெருக்கடியால் முழு உலகப்பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளது. முழு உலகளிலும் உற்பத்தி, பகிர்ந்தலித்தல் மற்றும் நுகர்வுச் செயற்பாடுகளுக்கு தடை ஏற்பட்டுள்ளன. விமான நிலையங்களும், துறைமுகங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனால் பண்ட மாற்றங்கள் தடைப்பட்டுள்ளன. கோடிக்கணக்கானவர்கள் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளதுடன், வறுமையும் அதிகரித்துள்ளது.
பட்டினி மற்றும் போஷாக்கு குறைப்பாடுகளும் அதிகரித்துள்ளன. இதுதொடர்பில் வாழ்க்கைச் செலவுத் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அதன்போது, சம்பிரதாய முறைமைகளுக்கு பதிலாக மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடி இறக்குமதியாளர்களுடன் செய்துக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு குறைவான விலையில் 27 அத்தியாவசிய பொருட்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த 27 பொருட்களினதும் சலுகை விலை வருமாறு,
1. சிவப்பு பச்சை அரிசி 1 கி.கி – (புதிய விலை) 93 ரூபாய் – (பழைய விலை) 106 ரூபா,
2. வெள்ளை பச்சை அரிசி 1 கி.கி (புதிய விலை) 93 ரூபா – (பழைய விலை) 105 ரூபா,
3. வெள்ளை நாடு 1 கி.கி (புதிய விலை) 96 ரூபா – (பழைய விலை) 109 ரூபா,
4. சம்பா 1 கி.கி (புதிய விலை) 99 ரூபா – (பழைய விலை) 120 ரூபா,
5. கீரி சம்பா 1 கிலோகிராம் (புதிய விலை) 125 ரூபாய் – (பழைய விலை) 140 ரூபாய்,
6.கோதுமை மா 1 கி.கி (புதிய விலை) 84 ரூபா – (பழைய விலை) 105 ரூபா,
7. வெள்ளை சீனி 1 கி.கி (புதிய விலை) 84 ரூபா – (பழைய விலை) 105 ரூபா,
8. சிவப்பு சீனி 1 கி.கி (புதிய விலை) 99 ரூபா – (பழைய விலை) 110 ரூபா,
9. தேயிலை தூள் (100கிராம்) (புதிய விலை) 95 ரூபா – (பழைய விலை) 130 ரூபா,
10. சிவப்பு பருப்பு (அவுஸ்திரேலியா) 1 கி.கி (புதிய விலை) 165 ரூபா – (பழைய விலை) 188 ரூபா, 11.பெரிய வெங்காயம் (இந்தியா) 1 கி.கி (புதிய விலை) 120 ரூபா – (பழைய விலை) 140 ரூபா, 12.உள்நாட்டு உருளைகிழங்கு 1 கி.கி (புதிய விலை) 180 ரூபா – (பழைய விலை) 216 – 220 ரூபா, 13.பாகிஸ்தான் உருளைகிழங்கு 1 கி.கி (புதிய விலை) 140 ரூபா – (பழைய விலை) 190 ரூபா, 14.கடலை ஒரு கி.கி (புதிய விலை) 175 ரூபா – (பழைய விலை) 225 ரூபா,
15. காய்ந்த மிளகாய் 1 கி.கி (புதிய விலை) 495 ரூபா – (பழைய விலை) 550 ரூபா,
16. உள்நாட்டு ரின் மீன் 425 கிராம் (புதிய விலை) 220 ரூபா – (பழைய விலை) 240 ரூபா, 17.இறக்குமதி செய்யப்படும் ரின் மீன் 425 கிராம் (புதிய விலை) 265 ரூபா – (ப.விலை) 280 ரூபா,
18. நெத்தலி மீன் 1 கி.கி (புதிய விலை) 545 ரூபா – (பழைய விலை) 700 ரூபா,
19. தோலுடனான கோழி இறைச்சி (புதிய விலை) 400 ரூபா – (பழைய விலை) 430 ரூபா,
20. கட்டி உப்பு 1 கி.கி (புதிய விலை) 43 ரூபா – (பழைய விலை) 55 ரூபா,
21. பால் மா 400கிராம் (புதிய விலை) 355 ரூபா – (பழைய விலை) 380 ரூபா,
22. சோயா எண்ணெய் 500 மில்லி லீற்றர் (புதிய விலை) 310 ரூபா – (பழைய விலை) 470 ரூபா, 23.ஆடைகளை கழுவும் சவர்க்காரம் 115கிராம் (புதிய விலை) 43 ரூபா – (பழைய விலை) 53 ரூபா, 24.ஆடைகளை கழுவும் சவர்க்காரம் 650 கிராம் (புதிய விலை) 260 ரூபா – (ப.விலை) 325 ரூபா, 25.வாசனை சவர்க்காரம் 100கிராம் 56 ரூபாய் – (பழைய விலை) 63 ரூபாய்,
26. கைகளை கழுவும் திரவம் 100 மில்லிலீற்றர் (புதிய விலை) 250 ரூபா – (ப.விலை) 350 ரூபா, 27.முகக்கவசம் (எஸ்.எல்.எல் தரச்சான்றிதழ்) (புதிய விலை) 14 ரூபாய் – (பழைய விலை) 25 ரூபா, மக்களுக்கு இது மிகவும் கஷ்டமான காலமாகும். சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக இந்தப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றார்.