இலங்கையுடன் மோத கட்டுநாயக்காவில் தரையிறங்கியது பங்களாதேஷ் அணி
Sri Lanka Cricket
Bangladesh Cricket Team
Asian Games 2023
By Sumithiran
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 08/27 பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
27 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழு 08/27 அன்று பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிலிருந்து UL-190 என்ற சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கையுடன் மோதல்
இந்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றது.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 08/31 ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி