வெளிநாடொன்றில் தாக்குதலுக்குள்ளான இந்து கோவில்: உடைக்கப்பட்ட சிலைகள்
பங்களாதேஷில் (Bangladesh) இந்து கோவில் ஒன்றின் மீது மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜமால்பூர் மாவட்டத்திலுள்ள சரிஷாபாரி பகுதிக்குட்பட்ட ஹிந்து கோயிலில் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் கோயிலில் இருந்த ஏழு சிலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நிர்வாகக் குழு
மகாளய அமாவாசையைத் தொடர்ந்து கோயிலைத் திறக்க நிர்வாகக் குழுவின் தலைவர் கோயிலுக்கு சென்ற நிலையில், அங்கு இருந்த சிலைகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிசிரிவி காட்சிகளை பார்வையிட்டதில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், கோயிலில் துர்கா பூஜைக்காக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதியுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் சிலைகளில் தலை மற்றும் கைகளை அவர்கள் உடைத்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டாவது தாக்குதல்
இதையடுத்து, காவல்துறையினருக்கு முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அதிகாரிகள் “இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்தோம்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளோம்'' என தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் கடந்த ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
