ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு அறிவிப்பு! தீவிரம் காட்டும் வங்கதேசம்
இந்தியா–வங்கதேச நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் அசாதுஸ்மான் கான் கமலையும் இந்தியா தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் மோதிய போராட்டம் வன்முறையாக மாறி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு பெரும் அழுத்தத்தை எதிர்கொண்ட ஷேக் ஹசீனா பதவியை விட்டு விலகி, ஆட்சியும் கவிழ்ந்த நிலையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்
பின்னர் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
புதிய அரசு அமைந்ததும், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

Image Credit: Al Jazeera
மாணவர் போராட்டத்தை அடக்குவதற்காக அவர் திட்டமிட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்த உத்தரவிட்டார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.ஆனால், இத்தகையகுற்றச்சாட்டுகளை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.
இந்தியாவின் பதில்
எவ்வாறாயினும், இந்த வழக்கில் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் ஹசீனாவை குற்றவாளி என அறிவித்து, மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டனர்.

Image Credit: Al Jazeera
எனினும், இந்த தீர்ப்பு பாரபட்சமானது என்றம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் விளைவுமென அவர் கருத்து குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேச அரசின் கோரிக்கைக்கும், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கும் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்