சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்த பிரபல வீரர்
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
“இது திடீர் முடிவு அல்ல. நான் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். சில காரணங்களை இங்கே சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன் என ஊடகவியலாளர் சந்திப்பில் தமீம் இக்பால் கூறினார்.
கண்ணீருடன் ஓய்வு அறிவிப்பு
In a gut-wrenching press conference, a teary @TamimOfficial28 has called time on his ?? career.
— ?Flashscore Cricket Commentators (@FlashCric) July 6, 2023
You have so much to be proud of, Tamim bhai. You own national records that will last years if not forever and were a magnificent servant to ?? cricket.pic.twitter.com/1OQkcwkzh4
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே அவர் கண்ணீர் விட்டு அழுத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது
இந்தப் பயணத்தில் என் மீது நம்பிக்கை வைத்த சக வீரர்கள், பயிற்சியாளர்கள், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, எனது குடும்பத்தினர் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும் என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையும்தான் பங்களாதேஷ் அணிக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுக்க தூண்டியது.
அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க
என் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க உங்கள் பிரார்த்தனைகள் வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.
30 வயதான தமிம் இக்பால் 2007-ல் ஒருநாள் போட்டியின் மூலம் அறிமுகமானவர். மொத்தம் 15,205 ஓட்டங்களை எடுத்திருக்கிறார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது வீரர் இக்பால் என்பது குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)