குறையவுள்ள வட்டி விகிதங்கள் - நாட்டு மக்களுக்கு வெளியாகிய மகிழ்ச்சி தகவல்
Central Bank of Sri Lanka
Parliament of Sri Lanka
Sri Lanka
By pavan
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (08) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
வட்டி வீதங்கள் குறைப்பு
கடந்த சில மாதங்களில் வட்டி வீதம் குறைக்கப்பட்டதில் அதிகபட்ச மதிப்பு நேற்றைய தினம் பதிவானதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, 91 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் 2.5% குறைந்துள்ளதுடன் 182 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் சுமார் 3.4% குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்