வங்கி கடன் வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lankan Peoples
Interest Rate
Sri Lanka Banks
By Dhilak
நாட்டின் பல முன்னணி வர்த்தக வங்கிகளால் வழங்கப்படும் முதன்மை கடன் வட்டி வீதங்கள் 9 வீதத்திற்கும் கீழ் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் படி, கடந்த வார இறுதியில், இலங்கையில் உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் சராசரி முதன்மைக் கடன் வீதம் (AWPR) கடந்த வாரத்தில் 9.28% இருந்து 9.15% ஆக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வட்டி வீதங்கள்
இந்த நிலையில், கடந்த வாரத்தில், மக்கள் வங்கி 8.88 வீதத்தையும், ஹட்டன் நேஷனல் வங்கி 8.92 வீதத்தையும் மற்றும் கொமர்ஷல் வங்கியில் 8.84 வீதமாகவும் கடன் வட்டி வீதங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், யூனியன் வங்கியில் 8.89 வீதமாகவும் NDB வங்கியில் 8.81 கடன் வட்டி வீதங்கள் பதிவாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி