நீதி அமைச்சருக்கு ஆதரவாக மொரட்டுவையில் பிரமாண்டமான பதாகைகள்!
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு ஆதரவு தெரிவித்து பிரமாண்டமான பதாகைகள் (Banners) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மொரட்டுவை பகுதி முழுவதும் இந்த பதாகைகைள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற்ற ஹர்ஷண நாணயக்காரவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
நீதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னணியில் உள்ள உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அதனைத் தோற்கடிப்பதற்கு ஆதரவளித்த பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பதாகைகளைக் காட்சிப்படுத்தியதற்கான முழுமையான பொறுப்பையும் மொரட்டுவை பிரதேச மக்களே ஏற்றுக்கொள்வதாக அந்த பதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |