உலக மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட இந்துக் கோவில்!

Narendra Modi Dubai India Hinduism
By S P Thas Feb 23, 2024 04:31 AM GMT
Report
Courtesy: சுபாஷ் சந்திர போஸ் ராஜவேலன்

உலகத்தின் பார்வையை தற்போது தன்பால் ஈர்த்துள்ளது, ஐக்கிய அரபு அமீரகத்தில் அமையப்பெற்றுள்ள பிரம்மாண்ட இந்துக் கோவில்.

உலகின் மனித நேய சகோதரத்துவம் பறைசாற்றும் அற்புத பூமியாக ஐக்கிய அரபு அமீரகம் இந்த புதிய வரலாற்றை செதுக்கி உள்ளது.

டுபாய், அபுதாபி, சார்ஜா, உமல் குயின், அஜ்மன், ராசல் கைமா எழு மாகாணங்களை உள்ளடக்கிய ஜக்கிய அரபு நாடுகள் அழைக்கபடுகிறது, இவை முழுமையாக இஸ்லாமிய நாடாக விளங்கினாலும் பல தரப்பட்ட மக்கள் தங்களின் மதசார்போடு இறை வழிபாடுகளை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

டுபாய் டேரா எனப்படும் பகுதியில் சிறிய அளவில் சிவன் கோவில் ஐம்பது ஆண்டுகள் மேலாக இருந்தது. அந்த கோவில் தற்போது துபாய் ஜபல் அலி என்ற இடத்தில் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

உலக மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட இந்துக் கோவில்! | Baps Hindu Mandir Temple Special Events

700 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கபட்ட அற்புத நுணுக்கங்களைக் கொண்ட பிரம்மாண்ட கோவில் என்கிற சிறப்போடு பல தரப்பட்ட மதத்தினர் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தக் கோவில், பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் புரிதலின் சின்னமாக விளங்குகிறது என்பதற்கு காரணம், ஒரு இஸ்லாமிய நாட்டின் ஆட்சியாளர் இந்து கோவிலுக்கு நிலம் கொடுத்திருப்பது தான்.

இந்தக் கோவிலின் முன்னணி கட்டிடக் கலைஞர் ஒரு கிறிஸ்தவ கத்தோலிக்கர், திட்ட இயக்குனர் ஒரு சீக்கியர், தலைமை ஆலோசகர் அடிப்படையில் நாத்திகர், அடித்தளத்தை வடிவமைத்தவர் ஒரு பௌத்த மதத்தை சேர்ந்தவர், கோவில் தலைவர் ஜெயின் மதத்தவர்.

கோவில் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் பார்சிகள்,  இப்படி பார்த்துப் பார்த்து உருவாக்க பட்ட உலகின் மத நல்லிணக்க கோவில் உலகின் இது என்றால் மிகையாகாது.

உலக மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட இந்துக் கோவில்! | Baps Hindu Mandir Temple Special Events

இந்தக் கோவிலுக்கு வருகை தரும் ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையை வரவழைக்கும் இடமாக இந்தக் கோவில் இருப்பதோடு, அன்பு மற்றும் நல்லிணக்க செய்தியை உலகமெங்கும் பரப்பும் இடமாகவும் விளங்குகின்றது.

402 தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட இந்தக் கோவிலில், ஒவ்வொரு தூணிலும் இராமாயணம், சிவபுராணம், பகவத்கீதை மற்றும் மகாபாரத வரலாற்று புராணங்களை வடிக்கபட்டுள்ளன.

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என ஐந்தும் அற்புதமாக பார்க்கக்கூடிய வகையில், அழகிய மாடம்  ஒன்றும் கோவிலின் உட்‌புறத்தில் நிறுவப்பட்டுள்ளது.

விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் சின்னமாக விளங்கும் அமீரகத்தின் ஒட்டகமும் அதனோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இந்தக் கோவிலை அற்புதமாக நிர்மாணிப்பதற்கு 800இற்கும் மேற்பட்ட கண்டெய்னர்களில் கற்கள் இந்தியாவில் இருந்து ஐக்கிய அமீரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

உலக மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட இந்துக் கோவில்! | Baps Hindu Mandir Temple Special Events

மிகச் சிறந்த சிற்பிகள், வடிவமைப்பாளர்கள் என 3000இற்கும் மேற்பட்டோர் கோவில் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டு, சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடித்து இருக்கும் வகையில் இந்த கற்கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட கட்டிடங்கள் ,வியத்தகு சாலைகள், கண்ணைப் பறிக்கும் மின் விளக்குகள் இவைகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் அடையாளங்கள் அல்ல.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் வகையில் பிரம்மாண்ட சாட்சியாக அபுதாபி இந்து கோவிலும் இன்று எழுந்து நிற்கிறது, ஈற்றில் ஐக்கிய அமீரக தேசம் அன்பின் வெளிப்பாடாக மனிதநேயத்தை உலகிற்கே பறை சாற்றும் அடையாளமாக இந்தக் கோவிலை அமைத்துள்ளது என்று தான் கூறவேண்டும் .

உலக மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட இந்துக் கோவில்! | Baps Hindu Mandir Temple Special Events

இதன் பின்னணி என்று பார்க்கையில், 1997, ஆம் ஆண்டு இந்து மத ஆன்மீகத் தலைவர் பிரமுக் சுவாமி மகராஜ், ஷார்ஜாவில் உள்ள ஒரு பாலைவனத்திற்குச் சென்று உரையாடிய போது, அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே அன்பும் நல்லிணக்கமும் இருப்பதைப் பற்றி உணர்ந்து பேசிய அவர், "அபுதாபியில் ஒரு கோவில் கட்டப்படட்டும், அது நாடுகளையும், கலாச்சாரங்களையும், மதங்களையும், சமூகங்களையும் நெருக்கமாக்கட்டும்’ என்ற தனது பிரார்த்தனையைத் தெரிவித்து இருந்தார்.

அவரின் அந்தப் பிரார்த்தனை கிட்டத்தட்ட சாத்தியமற்ற கனவாக கூறப்பட்ட நிலையில் அது தற்போது முழுமையாக நனவாகியுள்ளது.

உலக மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட இந்துக் கோவில்! | Baps Hindu Mandir Temple Special Events

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் கோயில் அமைக்கப்பட வேண்டும் என விரும்பியதன் விளைவாக இந்த கோவில் அமையப் பெற்றதாக சொல்லப்படுகிறது.

2015ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்த போது, அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

உலக மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட இந்துக் கோவில்! | Baps Hindu Mandir Temple Special Events

இதைத்தொடர்ந்து டுபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடியில் (5.5 ஹெக்டேர்) இடம் அபுதாபி அரசு சார்பில் இந்துக் கோவில் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது.

இதற்கான உத்தரவை அன்றைய அபுதாபியின் பட்டத்து இளவரசராகப் பொறுப்பு வகித்த தற்போதைய அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார்.

இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகளை‌ மேற்கொள்வதற்காக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்புக்கு முறைப்படி வழங்கப்பட்டது.

உலக மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட இந்துக் கோவில்! | Baps Hindu Mandir Temple Special Events

இந்த அமைப்பு இந்தியா உட்பட இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஆபிரிக்க நாடுகள் வரை மொத்தம் 1,200 க்கும் மேற்பட்ட கோவில்களை நிர்மாணித்து நிர்வகித்து வருகிறது.

அபுதாபிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாப்ஸ் அமைப்பின் நிர்வாகிகளை நேரில்‌ சந்தித்து கோயில் கட்டும் பணிகள், கோவில் கட்டுமான திட்டங்கள் போன்றவற்றை ஆவலுடன் கேட்டறிந்தார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதியன்று அபுதாபியில் இந்துக் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, பிரதமர் மோடி டுபாயில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

உலக மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட இந்துக் கோவில்! | Baps Hindu Mandir Temple Special Events

பின்னர் டுபாய் ஒபெரா ஹவுஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கோவில் மாதிரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

எல்லா மதத்தினரும் எல்லா தரப்பினரும் சகோதரத்துவமாக அவர் அவர் அடையாளங்களை அச்சு பிசகமால் எவரும் எவரையும் மனம் கோணாமல் ஒன்றிணைந்து வாழும் அற்புத தேசமாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.

அனைவருக்கும் சம இடமளித்து அன்பு பாராட்டும் அழகிய ஐக்கிய அமீரக நாடு. அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அபுதாயில் அமைக்க பட்ட இந்து கோவில் விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.

உலக மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட இந்துக் கோவில்! | Baps Hindu Mandir Temple Special Events

அனைத்து மொழி, இனம், மதங்களை கடந்து அனைத்து தரப்பு வகை மக்களையும் வாரி அரவணைத்துக் கொள்ளும் அமீரகம், இயல்பான மதம் தாண்டி மனித நேய அன்பை ஒலித்து கொண்டே இருக்கிறது.

உலகில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் சொந்த தாய் நாட்டில் இருப்பது போன்ற உணர்வை அமீரகத்தில் வசிக்கும் பிற நாட்டு மக்கள் உணருகிறார்கள். இங்கு வாழும் வெளிநாட்டவர்களில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர்.

ஐக்கிய அமீரககத்தில் உள்ள ஏழு மாகாணங்களைக் குறிக்கும் வகையில் ஏழு கோபுரங்களை உள்ளடக்கிய கோவில் அமைப்பு மாடல் அமைந்திருந்தது.

உலக மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட இந்துக் கோவில்! | Baps Hindu Mandir Temple Special Events

இக்கோவிலில், சுவாமி‌நாராயணன், ராதா கிருஷ்ணன், ராமா சீதா சிவா பார்வதி, ஜெகநாதன்,வெங்கடேஸ்வரா,அய்யப்பன் உள்ளிட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

அமீகரம் அதிக படியான வெப்ப நிலை உள்ள பகுதி என்பதால் அதிக படியான சூரிய வெப்பத்தை தாங்க கூடிய கற்களை எழுப்ப வேண்டும் என்கிற அடிப்படையில் கோவில் கற்கள் வைத்து எழுப்பப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் பிங்க் கற்கள் மணற் கற்கள் மட்டுமில்லாது, இத்தாலிய பளிங்குக்கற்கள் உட்புறத்தில் அமைக்கபட்டுள்ளன.

உலக மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட இந்துக் கோவில்! | Baps Hindu Mandir Temple Special Events

அபுதாபியில் அமைக்கபட்டுள்ள "இந்து கோவில்" அதை உருவாக்கியவர்களுக்கு, மட்டும் சொந்தமானது அல்ல, அதை பார்வையிடும் அனைத்து தரப்பு மக்களுக்கு சொந்தமானது என்றும் ,இது மக்களுடைய கோவில் என -BAPS இந்து மந்திர் (கோயில்) திட்டத் தலைவர் பூஜ்ய பிரம்மவிஹாரிதாஸ் சுவாமி தெரிவித்துள்ளார்.

இங்கு வருகை தரும் ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையை வரவழைக்கும் இடமாக இது அமைவதோடு, இந்தக் கோவில் அன்பு மற்றும் நல்லிணக்க செய்தியை உலகமெங்கும் பரப்பும் என்று தெரிவித்துள்ளார்.

சிறப்பு இணையச் செய்தியாளர் - சுபாஷ் சந்திர போஸ் ராஜவேலன்

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், மெல்போன், Australia

27 Nov, 2021
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, வவுனியா, Milton Keynes, United Kingdom

17 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான், பிரான்ஸ், France

23 Nov, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

23 Nov, 2009
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, தெல்லிப்பழை

23 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Ajax, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், புத்தளம், Frederikssund, Denmark, Gormley, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, முனைத்தீவு

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கனடா, Canada

21 Nov, 2017
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், சுவிஸ், Switzerland

21 Nov, 2007
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, வவுனியா கூமாங்குளம்

26 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024