பிரபல தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நிதியுதவியில் மாணவர்களுக்கான அடிப்படை வசதி தொகுதி திறந்துவைப்பு
IBC Tamil
Jaffna
Reecha
By Sumithiran
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் பிரபல தொழிலதிபரும் ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவரும் மற்றும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் நிறுவுநருமான கந்தையா பாஸ்கரனின் நிதி அனுசரணையில் அமையப்பெற்ற கட்டடத்தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
திடீர் சுகவீனம் அடையும் மாணவர்களுக்கான முதலுதவி மற்றும் வைத்தியசாலை அனுப்பி வைப்பதற்கு முன்னதான இடைநிலை பராமரிப்பு ஓய்வு நிலையம் அதற்கான அடிப்படை வசதிகளுடன் வர்த்தகப்பிரிவு வகுப்பறைகளின் மையப்பகுதியில் இன்று 05.06.2023 திங்கட்கிழமை காலை 10.15 இற்கு பாஸ்கரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மாணவர்களுக்கான அபிவிருத்தி

இச் செயற்பாடு தொழில்நுட்பவியல் கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தின் குறுகியகால மாணவர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளில் மற்றுமோர் எடுத்துக்காட்டாக அமையப்பெற்றுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்