தவறை திருத்த சந்தர்ப்பம் அளியுங்கள் - மக்களிடம் பசில் கோரிக்கை
Basil Rajapaksa
Sri Lankan Peoples
Sri Lanka Podujana Peramuna
Election
By Sumithiran
இழைக்கப்பட்ட தவறுகளை புரிந்து கொண்டு அவற்றை தீர்க்க ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள் என பசில் ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கெழும்பில் ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அடிக்கக்கூடாத பந்தை அடுத்து ஆட்டமிழந்த சனத் ஜயசூரிய
“குறிப்பிட்ட கிரிக்கட் போட்டியில் எமது சனத் ஜயசூரிய பந்தை அடித்த போது, விளையாட்டு வர்ணனையாளராக வந்த பிரேமசிறி அபயசிங்க, அனுபவமிக்க வீரர் என்ற வகையில், அடிக்கக்கூடாத பந்தை அடித்து ஆட்டமிழந்ததாக கூறுகிறார்.
தவறுகளை சரிசெய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்
எனவே, சில தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதால், பொதுமக்கள் கவனமாக சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிழைகள் எங்களிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பிழைகளைத் தேடினோம். அந்த தவறுகளை சரிசெய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனத் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி