வெளிநாடு செல்ல முயற்சித்த பசில்! திருப்பி அனுப்பிய விமான நிலைய அதிகாரிகள்
Sri Lanka Airport
Basil Rajapaksa
SL Protest
By Kiruththikan
வெளிநாடு செல்ல முயற்சித்த பசில்
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றபோது, அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு குடிவரவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தங்கள் கடமைகளில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, பசில் ராஜபக்சவின் முயற்சி தடைபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
