பஷில் ஒரு அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றவர்! எதிர்க்கட்சி கிண்டல்
பஷில் ராஜபக்க்ஷ அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற பணம் சம்பாதிக்க வந்துள்ளார் போல், எனவே தான் அவர் டெண்டர்களை அழைக்காமல் இதைச் செய்யப் போகிறார். நாம் நாட்டின் மின் உற்பத்தி ஆற்றல் வெளிநாட்டினருக்குச் சென்றால் என்ன நடக்கும்? நாங்கள் நாட்டை வெளிநாட்டினருக்கு வழங்க அனுமதிக்க மாட்டோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமனடற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆர்ப்பாட்டங்களை அடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இன்றைய ஆட்சியாளர்கள் எதிர்க் கட்சியில் இருக்கும் போது என்ன கூறுனர் என்று மக்கள் நன்றாக அறிவர்.
ஒரு அமைச்சர் சமீபத்தில் ஒரு காகம் கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டால் என்ன செய்ய என்று கூறினார். எதிர்க்கட்சி இதற்கொள்ளாம் பயப்படும் என்று நினைக்க வேண்டாம் என்று கூறினார்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்பு பஷில் ராஜபக்க்ஷ தான் பொருளாதார அமைச்சராக இருந்தார். அப்போது அவர் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் வசந்தம் என்று அழைக்கப்பட்ட பல திட்டங்களை முன்னெடுத்த போதும் கூட மக்கள் தோற்கடித்தனர், இதனால் தான் அப்போது மஹிந்த ராஜபக்க்ஷ வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது.
வாக்களித்த 69 லட்சம் மக்கள் ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம் என்று நினைத்து மனநோயால் பாதிக்கப்படுகிறார். அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, இளைஞர்கள் சுவர்களில் படங்களை வரைவதைக் கண்டோம். இப்போது அவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
அந்த சுவர் சித்திரங்களை மறைத்து பஷிலினுடைய வருகையைத் தொடர்ந்து சுவரொட்டிகளை பதித்துள்ளனர். பலகையையும் அகற்றியுள்ளனர்.
ஜனாதிபதியின் பயணப் பாதை காரணமாக மொரகஹகந்த - பிலியந்தலை வீதியின் இரு பக்கங்களிலுமுள்ள பலகை சிறு கடைகளை ஜனாதிபதிக்கு அசிங்கம் என்று அகற்றியுள்ளனர்.
பழக் கடை, வெற்றிலை கடை போன்ற சாதாரண மக்களின் கடைகளை இவ்வாறு அகற்றியுள்ளனர், இவ்வாறு அகற்றுவதன் மூலம் அரசாங்கம் அடக்குமுறையைத் தொடங்கியுள்ளது.
உதவியற்ற மக்களின் பலகைகளினாலான கடைகளை அகற்றி அடக்குமுறையை பிரயோகிப்பதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் மக்கள் பக்கம் நின்று போராடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.