கோட்டாபயவை விட பசில் ஜனரஞ்சகவாதி - ஆளும் தரப்பு எம்.பி புகழாரம்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் அனுபவமில்லாத தலைவர் எனவும் பசில் ராஜபக்ஷ நாட்டு மக்களின் அவலங்களை அறிந்த மக்கள் தலைவர் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக கோட்டாபய ராஜபக்சவை விட முன்னிலையில் இருப்பதால் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர் பசில் ராஜபக்ச எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று பசில் ராஜபக்ஷ பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு பின்வரிசை உறுப்பினர்களை பலிகொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முடிவு தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறினார்.
இணைய ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
