மோடியுடன் ராசியிழந்த பசில்! மூன்றாவது வாய்ப்பும் இழப்பு
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் (Basil Rajapaksa) இந்தியப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக இன்று அவர் இந்தியாவிற்கு பயணம் செல்வார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அவருடன் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த பயணத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனை செலுத்துவதற்காக அவரின் இந்தப் பயணம் அமையவிருந்தது.
இந்நிலையிலேயே நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்தியப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பசிலின் இந்திய பயணத்தின் போது கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும் மூன்று பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திடப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
