மௌனம் கலைத்தார் பசில் : தேர்தல்கள் பிற்போடுவதற்கு கடும் எதிர்ப்பு
Basil Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Election
By Sumithiran
பிரதான தேர்தல்கள் இரண்டையும் பிற்போடுவதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனை கூறினார்.
பொதுஜன பெரமுனவின் அரசாங்கமா என்பதில் சந்தேகம்
தற்போதைய அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கமா என்பதில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
அத்துடன், அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஸ வலியுறுத்தினார்.
அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல்
அதிபர் தேர்தலை நடத்தினால் வெற்றிபெறும் கட்சிக்கு எல்லையற்ற அதிகாரம் கிடைக்கும் அது சிறந்தது அல்லவென நான் நினைக்கிறேன்.எனவே அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் சீரான நாடாளுமன்றம் ஒன்று உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி